search icon
என் மலர்tooltip icon
    • முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றி அதிகம் பேசியது இல்லை.
    • புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    திருநங்கை ஆர்வலரும், "மேட் இன் ஹெவன்" சீசன் 2 இணைய தொடரில் நடித்தவருமான திரினெத்ரா ஹல்தார் தன் முகத்தில் பெண்மையாக்கும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்ததன் மூலம், தான் பெண்ணாக மாறும் மாற்றங்கள் முழுமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், முகம் முழுக்க பேன்டேஜ் போடப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இவரது முகத்தை சுற்றி கிராஃபிக் வரைபடம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முகத்தில் பெண்மையாக்கும் அறுவை சிகிச்சை செய்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதை எனக்காக நானே செய்து கொண்டேன். இதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. இத்தகைய மாற்றம் எனக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய வலி இல்லை, மாறாக இது புனிதமான ஒன்று. நான் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றி அதிகம் பேசியது இல்லை."

    "இந்த விஷயத்தில் கூச்சப்பட வேண்டாம் என்று நினைத்தேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யாரும் கண்டுக் கொள்வதில்லை. உண்மையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த விஷயத்தில் நான் காத்திருக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக கடந்து வந்த பிறகு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்," என்று தெரிவித்தார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்களாக மாற்றப்பட்டது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெற இருந்த இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. எனினும் மழை காரணமாக இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இடையில் மழை நின்றதால், போட்டி ஏழு ஓவர்கள் நடத்தப்படும் என்று கூறி டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த நிலையில், டாஸ் போடப்பட்டதில் இருந்து மழை மீண்டும் துவங்கியது.

    தொடர்ச்சியாக மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவாலிஃபையர் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்கள் போட்டி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில், இது ஏழு ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

    தோல்வி அடையும் பட்சத்தில் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் ராஜஸ்தான் அணி இருக்கும். அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன்.
    • யாரிடமும் நான் வாய்ப்பு கேட்டதில்லை.

    ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை." அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ், "இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை."

    "சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்."

    "என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம். நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன்."

    "ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
    • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

    அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

    எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

    இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    • அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

    சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோ தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சிலந்தி ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
    • தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

    இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், குடிநீருக்காக என கூறி சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
    • உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

    2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் லீலா தார் பதக் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சோதிக்கப்பட்ட சோன் பப்டி தரமானது இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

    மேலும், கடை உரிமையாளர் லீலா தர் பதக்குக்கு 5000 ரூபாயும் விநியோகஸ்தர் அஜய் ஜோஷிக்கு 10,000 ரூபாயும், பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமாருக்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் குதிரையில் சில் அவுட் ஷாட்டில் கமல்ஹாசன் வருகிறார். இந்த அறிக்கையினால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×